இது விஜய் ஆண்டனியோட மாஸ்! : உலகம் முழுவதும் 1300+ தியேட்டர்களில் ‘சைத்தான்’

சையமைப்பாளர் விஜய் ஆண்டனியைப் பொருத்தவரை அவருடைய ஆக்டிங் கேரியரும்  ‘நான்’ படத்திலிருந்தே மிகச்சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான, புதுமையான கதைக்களத்துடன் இருக்கிறதா? என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருவதாலேயே டஜன் கணக்கில் படங்களில் நடித்தும் சில ஹீரோக்களுக்கு கிடைக்காத வரவேற்பும், பேரும், புகழும் விஜய் ஆண்டனிக்கு நான்கே படங்களில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது.

இன்றைய தேதியில் முன்னணி ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்களில் விநியோகஸ்தர்களின் கேரண்டி ஹீரோவான விஜய் ஆண்டனிக்கு ‘பிச்சைக்காரன்’ படம் தமிழில் மட்டுமில்லாமலும், தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கில் ரஜினி, கமல் ஆகியோருக்குப் பிறகு அதிக வசூல் செய்த ஹீரோ என்கிற பெருமையும் விஜய் ஆண்டனிக்கு உண்டு.

அந்த ‘பிச்சைக்காரன்’ படத்துக்குப் பிறகு ரிலீசாகப்போகும் படமென்பதால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட, தமிழகத்தில் 400 தியேட்டர்கள் உலகம் முழுக்க சுமார் 1300க்கும் அதிகமாக தியேட்டர்களில் இன்று பிரம்மாண்டமாக ரிலீசாகியிருக்கிறது ‘சைத்தான்’ .

முதல் 9 நிமிடக் காட்சிகளை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்ட்ராவாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது

மாஸ் என்றாலே அது விஜய், அஜித் தான் என்பது போல இது விஜய் ஆண்டனியின் மாஸ் என்று சொல்கிற அளவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே படத்துக்கு முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு உச்சக்கட்ட வரவேற்பை பெற்று இன்றுமுதல் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் ‘சைத்தான்’.

Arundhathi NairSaithanVijay Antony
Comments (0)
Add Comment