சும்மாவா விஜய் படமாச்சே..! : ‘விஜய் 61’க்காக திருமணத்தை தள்ளிப் போட்ட சமந்தா

‘பைரவா’வின் வெற்றியைத் தொடர்ந்து ‘விஜய் 61’ படத்தில் அட்லியுடன் கைகோர்க்கிறார் விஜய்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 100வது படமாக மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்

படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, வடிவேல், சத்யன், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

 சில தினங்களுக்கு முன்பு தான் இப்படத்தில் நாயகியாக நடிக்கும் சமந்தாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு சமந்தா படங்களில் நடிக்க மாட்டார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் விஜய் 61 படத்தில் நடிப்பதற்காகவே தனது திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் சமந்தா.

இதற்கிடையே சமந்தாவுக்குப் பதில் இந்தப்படத்தில் கார்த்திகா நாயரை டைரக்டர் அட்லி நடிக்க வைக்க முடிவு செய்ததாகவும் செய்தி வெளியானது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.

நாளை பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் துவங்கும் விஜய் 61 படப்பிடிப்பு தொடர்ந்து வட இந்தியாவில் சில பகுதிகளிலும், ஐரோப்பிய, ஆப்ரிக்க நாடுகளில் சில அழகிய இடங்களிலும் நடைபெற உள்ளது.

AtleeIlayathalapathySamanthaSamantha Marraigethalapathy 61vijayVijay61
Comments (0)
Add Comment