பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்ததன் மூலம் இந்த அந்தஸ்த்தை பெறும் சமந்தாவின் நிச்சய தார்த்தம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி மிக விமரிசையாக நடைபெற்றது. இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் வருகிற அக்டோபர் மாதம் 6-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது.
திருமணத்துக்குப் பிறகும் சமந்தா நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் மாமனார் நாகர்ஜூனாவும், மாமியார் அமலாவும் தெரிவிக்க வில்லை. இதனால் அக்டோபர் மாதம் மட்டும் எந்த படத்துக்கும் தேதிகளை கொடுக்கவில்லை.
அதன்பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இப்படி தொழில் ரீதியாக சின்சியர் சிகாமணியாக இருக்கும் சமந்தாவின் இன்னொரு முகம் நாக சைதன்யாவுக்கு செல்லச் சண்டையாக மாறியிருக்கிறது.
ஆமாம், வழக்கமாக காதலர்கள் தான் காதலிக்கும் போது மணிக்கணக்கில் போனில் பேசிக் கொள்வார்கள். ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படியெல்லாம் இல்லை. அவர் நாக சைதன்யாவுடம் பேசுவதை விட தன் வருங்கால மாமியார் அமலாவுடன் தான் போனில் மணிக்கணக்கில் பேசுகிறாராம்.
தினமும் இருவரும் 1 மணி நேரமாவது செல்போனில் பேசுகிறார்கள். என்னை பற்றி அடிக்கடி சமந்தா என் அம்மாவிடம் புகார் கூறி வருகிறார். இதற்காகவே அவருக்குப் பயந்து சில கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன் என்கிறார் நாக சைதன்யா!
மாமியாருக்கு ஏத்த மருமகள்!