சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ‘சமூக விரோதி ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இத் திரைப்படத்தை இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே தனது முதல் படமாக ‘பொது நலன் கருதி’ படத்தினை கந்து வட்டி கலாசாரத்திற்கு எதிராக எடுத்து பாராட்டப்பட்டவர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு- ஜிஜூ மோன் P.S., இசை- மலாக்கி , கலை -முஜிபுர் ரஹ்மான், எடிட்டிங் – மீனாட்சி சுந்தர், ஸ்டண்ட் – பிரபு, என்று தொழில்நுட்பக் கூட்டணி உருவாகியுள்ளது.நிர்வாகத் தயாரிப்புப் பொறுப்பை எஸ். வினு ஏற்றுள்ளார். T. அருள்மணி சீயோன் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த ‘சமூக விரோதி’ திரைப்படத்தில் பிரஜின் ,நாஞ்சில் சம்பத் ,கஞ்சா கருப்பு ,வனிதா விஜயகுமார்,தயாரிப்பாளர் கே.ராஜன் ,வழக்கு எண் முத்துராம் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
திரைப்பட நடிகர்கள் விஜய் சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட் ,கலையரசன்,இயக்குநர் மோகன் ஜி , அரசியல் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன்,நாஞ்சில் சம்பத்,திண்டுக்கல் லியோனி போன்று பல்வேறு ஆளுமைகள் 30 பேர் இந்தப் படத்தின் டைட்டில் லுக்கைத் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.’சமூக விரோதி ‘ டைட்டில் லுக், வெளியான நிமிடத்தில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
#சமூகவிரோதி #samugavirodhi