சமுத்திரகனி – எம். சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் “நாடோடிகள் 2”

2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் எம்.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.

மீண்டும் இந்த சமுத்திரகனி – எம்.சசிகுமார் வெற்றி கூட்டணி “நாடோடிகள் 2” படத்தில் இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, சமுத்திரகனி இயக்கும் இப்படத்தில் எம்.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தை போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக அமையும் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளனர்.

Nadodigal 2Samuthirakanisasikumar
Comments (0)
Add Comment