தேவை ஒரு ஹிட் : ‘பிச்சைக்காரன்’ இயக்குநரை தேடிப்போன உதயநிதி!

தயநிதி நடித்த படங்களிலேயே ஹிட்டான ஒரே படம் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” தான்.

அதிலும் அவரது நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான ‘கெத்து’ படத்தை ட்விட்டர் கரடிகள் கழுவி கழுவி ஊத்தியதால் ஆத்திரமடைந்த உதயநிதி அவர்களை நேரடியாகே ”பேய்டு கிரிட்டிக்ஸ்” என்று திட்டித் தீர்த்தார்.

அந்தளவுக்கு வருத்தத்தில் இருந்தவரை சமீபத்தில் ரிலீசான ‘பிச்சைக்காரன்’ படம் புது தெம்பை கொடுத்திருக்கிறதாம்.

பிச்சைக்காரனுக்கும், உதயநிதிக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்?

இனிமேல் தான் சம்பந்தப்படுத்தப் போகிறார் உதயநிதி.

‘பிச்சைக்காரன்’ படத்தைப் பார்த்து வியந்து போன உதயநிதி இயக்குநர் சசிக்கு போனைப்போட்டு மனதாரப் பாராட்டியிருக்கிறார். அதோடு எனக்கும் ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்களேன், நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று வாய் விட்டு கேட்டே விட்டாராம்.

கோடிகளை கொட்டி வைத்திருப்பவர் வலிய வந்து கேட்டால் சசிக்கு கசக்குமா என்ன? ஒரு நல்ல கதையோடு விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறாராம் சசி.

இதற்கிடையே விஜய் ஆண்டனியும் மீண்டும் சசி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.

SasiUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்சசி
Comments (0)
Add Comment