கதாநாயகன் போலீஸ், ஆனால் போலீஸ் கதை இல்லை – சஸ்பென்ஸ், த்ரில்லராக மிரட்ட வரும் ‘சத்ரு’

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கதிர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘சத்ரு’.

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இவர்களோடு பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மைல்ஸ்டோன் மூவிஸ் ஜி.டில்லிபாபு மார்ச் 8 ஆம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் நவீன் நஞ்சுண்டன்.

படத்தைப் பற்றி இயக்குநர் நவீனிடம் கேட்டோம்…

”இந்தப் படத்தில் கதிர் கேரக்டர் தான் போலீஸ். ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை நாயகன் கதிர் 24 மணி நேரத்தில் எப்படித் தேடி கண்டுபிடித்தார்? என்பதே திரைக்கதை. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக இருக்கும்” என்றார் நவீன் நஞ்சுண்டன்.

KathirSathrusrushti dange
Comments (0)
Add Comment