அட இதுக்கெல்லாமா ஸாரி கேட்பீங்க செல்வராகவன்? : சங்கடத்தில் நெளிந்த சூர்யா

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அடுத்த படமான ’மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

சந்தானம் ஹீரோ என்பதால் படத்துக்கு பூஜை போட்ட நாளிலிருந்தே இது எந்த மாதிரியான படமாக இருக்கும்? என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது.

அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும் விதத்தில் காட்சிகளை படமாக்கி வரும் செல்வராகவன் அதற்காக தற்போது ஆர்மேனியா என்ற நாட்டில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். முன்னாள் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த இந்த நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கொட்டி கிடக்கும் இந்த நாட்டில் செல்போனுக்கு சிக்னல் மட்டும் தான் அடிக்கடி கிடைக்காமல் போய் விடுமாம்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்ட செல்வராகவன் ஜூலை 23-ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு போன் செய்து வாழ்த்து சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார்.

ஆனால் வழக்கம் போல சிக்னல் கிடைக்காததால் அவரால் சூர்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அடுத்த நாளான ஜூலை 24-ம் தேதி சூர்யாவை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்தை போனில் சொன்னதோடு தாமதமாகச் சொன்னதுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டாராம்.

வாழ்த்துகளை பெற்றுக் கொண்ட சூர்யா ”அட இதுக்கெல்லாமா போய் ஸாரி கேட்பீங்க…” என்று சங்கடத்தில் நெளிந்தாராம்.

மன்னவன் வந்தானடி’ படத்தை முடித்த கையோடு சூர்யா நடிக்கும் புதுப் படத்தை செல்வராகவன் இயக்கப் போகிறார் என்பதும் இந்த படத்தில் ராகுல் ப்ரித்திசிங் நாயகியாக நடிக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

selvaragavanSuriyasuriya birthday
Comments (0)
Add Comment