எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றாலும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் இன்றைக்கும் சிறந்த படங்களில் ஒன்றாக ரசிகர்களால் போற்றப்படுகிறது.
அப்படிப்பட்ட சிறந்த படத்தைக் கொடுத்த இயக்குநர் சு.அருண்குமாரும், ஹீரோ விஜய் சேதுபதியும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
படத்தின் பெயர் விஜய் சேதுபதி பெயரின் இரண்டாம் பாதியான சேதுபதி!
ஏ.வி.எம் தயாரித்த சேதுபதி ஐ.பி.எஸ் என்ற டைட்டிலை முறைப்படி அவர்களிடம் அனுமதி வாங்கி இந்த டைட்டிலை வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இதுவும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை என்பதால் தான். ஆமாம் முதல்முறையாக விஜய் சேதுபதி இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இந்த டைட்டிலை வைக்கலாமான்னு இயக்குநர் என்கிட்ட சொன்னப்போ கொஞ்சம் ஓவரா இருக்குமோன்னு தோணுச்சு. அப்புறம் நெறைய டைட்டில்களை யோசிச்சு எதைவுமே கதைக்கு செட்டாகல, அப்புறம் இந்த டைட்டிலையே வெச்சிட்டோம் என்றார் விஜய் சேதுபதி.
போலீஸ் கதைன்னாலே ஹரி ஸ்டைல்ல பரபரன்னு இருக்கும், கெளதம் மேனன் ஸ்டைல்ல மென்மையா இருக்கும், இது எந்த மாதிரி டைப்? என்று கேள்வி வந்து விழ “கண்டிப்பா அந்த பேட்டன்ல இருக்காது சார், இதுவரைக்கும் வந்த போலீஸ் கதைகளை மாதிரி இல்லாம, போலீசுக்கு தனி ஸ்டைல்ல இந்தப் படத்துல காண்பிச்சிருக்கோம்.
பல உண்மைச் சம்பவங்களோட தொகுப்பு தான் இந்தப்படம். தினசரி பேப்பர்கள்ல வர்ற சம்பவங்களை கதையாக்கி இயக்கியிருக்கிறாராம் இயக்குநர் அருண்குமார்.
எல்லா ஹீரோக்கள் மாதிரியும் நீங்களும் மாஸ் காட்டணும்னு தான் இந்த போலீஸ் கதையை செலெக்ட் பண்ணினீங்களா? என்ற கேள்விக்கு ” எனக்கு போலீஸ் கதையில நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. ஆனா எல்லாமே சின்னச் சின்ன கெஸ்ட் ரோலாத்தான் வந்துச்சு. அதையெல்லாம் விட்டுட்டு பண்ணினா காலாகாலத்துக்கும் ரசிகர்களால பேசப்படுற போலீஸ் கதையா இருக்கணும்னு நெனைச்சேன். நான் நெனைச்ச மாதிரியே டைரக்டர் அருண்குமார் சொன்ன இந்தக் கதை எனக்குப் பிடிச்சிருந்தது.
மத்த படங்கள்ல வர்ற மாதிரி போலீஸ் அடிச்சா ஐம்பது பேர் பறக்கிற மாதிரி சீனெல்லாம் கெடையாது. நிஜத்துல ஒரு போலீஸ் அடிச்சா யாரும் பறக்க மாட்டாங்க.., ஆனா விழுவாங்கள்ல… அப்படி ஒரு யதார்த்தம் தான் இந்தப்படத்துல இருக்கும் என்றார் விஜய் சேதுபதி.
படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பீட்சா’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் ரம்யா நம்பீஸன்.
ஹீரோயின் கேரக்டர் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா. அதனாலே பல ஹீரோயின்களும் நடிக்கத் தயங்கிய இந்தப்படத்தில் தில்லான நடித்திருக்கிறார் ரம்யா நம்பீஸன். கதை எனக்குப் பிடிச்சிருக்கு. என்னோட கேரக்டர் பிடிச்சிருக்கு அதுபோதும் எனக்கு என்றாராம்!