ஆமாம், அதற்கு விதை போட்டிருக்கிறார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.
ஷங்கரின் இயக்கத்தில் ‘அந்நியன்’, ‘ஐ’ ஆகிய படங்களில் நடித்தார் சீயான் விக்ரம். அந்நியனை விட ஐ படத்துக்கு விக்ரம் போட்ட உடல் உழைப்பு கொஞ்ச நஞ்சமில்லை.
இந்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் கூட ‘ஐ’ படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு விருது கொடுக்கப்படாததை திரையுலக பிரபலங்களும் கண்டித்தார்கள். அந்தளவுக்கு அவர் தனது உழைப்பை கொட்டியிருந்தார். ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் போல ஆனது தான் மிச்சம்.
அதே போல விஜய்யும் ஏற்கனவே ஷங்கரின் ‘நண்பன்’ படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார்.
இப்போது இந்த இரண்டு ‘மாஸ்’ ஹீரோக்களையும் தனது அடுத்த படத்தில் இணைக்க ப்ளான் போட்டு வருகிறாராம் இயக்குநர் ஷங்கர்.
தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து ‘2.o’ படத்தை இயக்கி வரும் ஷங்கர் அடுத்து டபுள் ஹீரோ கதை ஒன்றை இயக்கப் போகிறார். இந்தக் கதையில் தான் விஜய்யையும், விக்ரமையும் நடிக்கக் கேட்டிருக்கிறாராம்.
விஜய் – விக்ரம் இருவருமே ஷங்கர் சொன்னால் தட்ட மாட்டார் என்பதால் இருவரும் ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி விடும் என்றே தெரிகிறது.
ஒருவேளை அப்படி உறுதியாகி விட்டால் இன்று விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு விக்ரம் ரசிகர்களும் இணைந்து கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி!
அட்ரா… அட்ரா… அட்ரா…