சமூகப் பிரச்சினையின் பின்னணியில், ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதால் மொத்த குழுவில் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
”வழக்கமாக, தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு நன்றி அறிவிப்பு செய்வார்கள். ஆனால் நான் இதுதான் நன்றி சொல்ல சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் முழுப்படத்துக்கும் இருந்தது. குறிப்பாக, காஷ்மீரின் கடும் குளிரில், மிகவும் அசாதாரணமான சூழலில் சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தது பாராட்டுக்குரியது” என்றார் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.
படத்தின் இயக்குனர் வினோத் டி.எல்லைப் பற்றி கூறும்போது, “இயக்குனர் தனது கருத்தை தெரிவித்த விதமும், ரங்கா தலைப்பின் முக்கியத்துவத்தை சொன்னதும் என்னை மிகவும் கவர்ந்தது. ‘காக்கும் கடவுள் ரங்கநாதன்’ என்பதன் தொடர்பு தான் ‘ரங்கா’ என்ற தலைப்பு. சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தது என்னை போன்ற ஒரு தயாரிப்பாளருக்கு கிடைத்த வரம். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
சிபிராஜ், நிகிலா விமல், ஆகியோருடன் சதீஷ், ரேணுகா, லொள்ளு சபா ஸ்வாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.