ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
தமிழில் தொடர்ந்து வாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக அடுத்தடுத்து வாய்ப்புகள் தானாக அமைந்தன. அதோடு தான் சேர்ந்து நடிக்கும் நடிகைகளோடு காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.
கமலின் மகள் ஸ்ருதியுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்த போது இருவரும் தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கூட செய்தி வெளியானது.
அந்த நெருக்கம் சில மாதங்களிலேயே புட்டுக்கொள்ள, அடுத்த சித்தார்த்திடம் சிக்கியவர் சமந்தா. இருவரும் உருக உருக காதலித்து தங்களது குடும்பத்தினருடம் காளகஸ்தி கோவிலுக்கு ஜோடியாகச் சென்று சாமியும் கும்பிட்டனர்.
இதனால் இருவரும் கூடிய விரைவிலேயே திருமணம் செய்யப் போகிறார்கள் என்று தெரிந்த நிலையில் அந்தக் காதலும் புட்டுக் கொண்டது.
இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கி மீடியாக்களிடம் பேட்டி கொடுத்தனர்.
அப்படித்தான் சித்தார்த்திடம் உங்கள் காதல் தோல்வியடைந்ததற்காக வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்டாராம் ஒரு நிருபர் அதற்கு ”நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை. இப்போது தான் எனக்கு நிம்மதி கிடைத்திருக்கிறது” என்று பதில் கொடுத்திருக்கிறார்.
பிரிஞ்ச பிறகும் சண்டை போடுறதை விட மாட்டாங்க போலிருக்கே..?