சொந்தப்படம் தந்த சோதனை : அடக்கி வாசிக்கும் சித்தார்த்!

முன்பெல்லாம் படங்களே இல்லை என்றாலும் தனது ட்விட்டரில் ஆக்டீவ்வாக இருந்து வந்தவர் நடிகர் சித்தார்த்.

படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதும் கூட அவருடைய ட்விட்டரில் அப்டேட் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது விவகாரத்தில் கருத்து சொல்லி சர்ச்சையை கிளப்பும் வேலையையும் அவர் செய்வதுண்டு.

அப்படி ஆக்டீவ்வாக இருந்த சித்தார்த் கடந்த சில மாதங்களாக சைலண்ட்டாக இருக்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு காரணம் அவர் இப்போது தயாரித்து வரும் சொந்தப்படம் தானாம்.

ஏற்கனவே அவர் அதிக பொருட்செலவில் தயாரித்த சொந்தப்படம் ‘ஜில் ஜங் ஜக்’ கையை கடித்ததால் அதிர்ச்சியடைந்த சித்தார்த் இந்தப்படத்தை கண்ணும் கருத்துமாக கூடவே இருந்து தயாரிப்பு வேலைகளை கவனித்து வருகிறாராம்.

அதனால் தான் ட்விட்டரில் வெட்டியாக கருத்து சொல்வது, சார் செய்வது ஆகிய வேலைகளைக்கு தற்காலிகமாக விடுமுறை கொடுத்திருக்கிறார்.

அமைதி நல்லது!

Actor Siddharthsiddharth
Comments (0)
Add Comment