சென்னை மாநகரமே மழை வெள்ளத்தின் பாதிப்புகளின் மீளாத் துயரத்தில் தங்களை சிறைபடுத்திக் கொண்டுள்ளது.
இந்த மெளமான நேரத்தில் சிம்பு பாடிய அந்த ‘பீப்’ பாடலை சமூக வலைத்தளங்களில் கேட்ட எல்லோருமே ஒருகணம் அதிர்ந்து தான் போனார்கள்.
‘என்னா பு……டைக்கு லவ் பண்ற’ என்று ஆரம்பிக்கும் அந்த பீப் சாங்கின் ஆரம்ப வரிகளே எல்லை மீறிய வரிகள்! காதுகளே பொது வெளியில் கேட்கத் தயங்கும் வார்த்தைகள்!!
இது கண்டிப்பாக சிம்பு- அனிருத்தின் வேலையாக இருக்கவே இருக்காது என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.
உலகம் முழுக்க சிம்புவைப் போல மிமிக்ரி செய்யக்கூடிய ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவருடைய வேலையாக இருக்கலாம் என்றும் நம்பினார்கள்.
ஆனால் ”ஆமாம் அந்தப்பாடலை பாடியது நான் தான்” என்று எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் பதில் சொல்லியிருக்கிறார் சிம்பு.
அதோடு விட்டால் பரவாயில்லை அடுத்து அவர் சொன்னது தான் அவர் எந்தவித மனநிலை கொண்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
அந்த சாங்க்கை நாங்க அதிகாரப்பூர்வமா ரிலீஸ் பண்ணல, நானும் அனிருத்தும் சேர்ந்து கம்போஸ் பண்ணின பாட்டு அது. அந்தப்பாட்டு எந்தப் படத்திலேயும் கிடையாது. ஆல்பத்திலேயும் இல்ல, யாரோ என்னோட போன்ல இருந்த பாட்டை நெட்ல லீக் பண்ணிருக்காங்க.
பாட்டைக் கேட்ட எல்லாரும் என்னைத் திட்றாங்க. அவங்ககிட்ட நான் ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன். அதே இண்டர்நெட்ல தான் பிட்டு பட வீடியோக்களும் இருக்கு. அதை பார்க்க ஆசைப்படுறவங்க போய் பார்க்கிறதில்லையா? அதேமாதிரி நாங்க கம்போஸ் பண்ணின இந்தப்பாட்டையும் புடிக்காதவங்க கேட்காதீங்க.
நான் என்னோட வீட்டு பெட்ரூம்லேயும், பாத்ரூம்லேயும் என்ன வேணும்னாலும் செய்வேன். அதை எட்டிப்பார்க்கிறதுக்கு எவனுக்கும் ரைட்ஸ் கிடையாது. என்று பொங்கினாராம்.
விவகாரம் மகளிர் அமைப்புகளின் காதுகளையும் எட்டி விட்டது. சிம்புவின் இந்த அநாகரீக செயலைக் கண்டித்து கோவையை சேர்ந்த மகளிர் அமைப்பு சிம்பு, அனிருத் இருவரையும் கண்டித்து அவர்களது புகைப்படங்களை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
அதோடு டாஸ்மாக்கை எதிர்த்து பாடிய கோவனை தமிழக அரசு அவரை இரவோடு இரவாக வீடு புகுந்து கைது செய்தது. ஆனால் சிம்பு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளவே முடியாத கேவலமான வார்த்தைகளைப் போட்டு இந்தப்பாடலை பாடியிருக்கிறார். அப்படிப்பட்ட வக்கிர புத்தியுள்ளவரை உடனே கைது செய்து ஜெயிலில் தள்ள வேண்டும் என்கிற எதிர்ப்புக் குரல்களும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் சிம்பு – அனிருத் இருவருமே கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்.
ஒரே ஒரு பீப் சாங் லீக்கானவே சிம்புவை சிறைக்குத் தள்ள போராட்டங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையிலும் சிம்பு மறக்காமல் சொன்ன கூடுதல் தகவல் என்ன தெரியுமா?
”இதே டைப்ல இன்னும் 150 பீப் சாங்க்ஸ் இருக்கு…”
உண்மையிலேயே கெட்டப் பையன் தான் சார் சிம்பு!!!