‘பீப் சாங்’ விவகாரத்தில் சிம்புவை விட தொழில் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அனிருத் தான்.
இப்போதுள்ள முன்னணி இசையமைப்பாளர்களுக்கு சரிநிகர் போட்டியாளராக வந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த விவகாரம் பற்றியெறிய ஆரம்பித்து விட்டது.
அந்த தகவலை கேள்விப்பட்டதும் முதலில் தனது ‘கொடி’ படத்திலிருந்து அனிருத்தை நீக்கியது அவரை சினிமாவுக்குள் அறிமுகப்படுத்திய தனுஷ் தான்.
”எனக்கும் அந்தப் பாடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டாலும், சேர்ந்து வேலை செய்தால் நமக்கும் சேர்த்து கெட்ட பெயர் வரலாம் என்று யோசித்த ஹீரோக்களும், இயக்குநர்களும் அடுத்தடுத்து முடிவெடுக்க, அனிருத்தின் மார்க்கெட் சரிவைக் காண ஆரம்பித்தது.
கைவசம் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, அஜித்- சிறுத்தை சிவா இணையும் படம் என ஒன்றிரெண்டு படங்களை மட்டுமே வைத்திருக்கும் அனிருத் மீதி நேரங்களில் ஆல்பங்களை வெளியிட்டும், வெளிநாடுகளில் கச்சேரிகளை நடத்தியும் கல்லா கட்டி வருகிறார்.
இதற்கிடையே எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்வதைப் போல மீண்டும் புதிய படங்களில் இணைந்து வேலை செய்து தங்கள் மீது படிந்திருக்கும் கெட்டவன் இமேஜை மாற்ற முடிவு செய்திருக்கிறார்களாம்.
என்ன நடக்குமோ? வெயிட் பண்ணிப் பார்ப்போம்.