லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். இன்னொரு ஜோடியாக மஹத் மற்றும் கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு 2019 பொங்கலுக்கு இந்தப்படம் ரிலீசாகும் என கடந்த சில வாரங்களாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும் சரிசமமாக மோதுகின்றன. இதனால் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான தியேட்டர்கள் கிடைப்பது கடினம் என்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
படம் எப்போது ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லாத நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப் போகிறாராம் சிம்பு. பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்தநாள். அதையொட்டி ”வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தை அந்த வார வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு. அதேபோல பிப்ரவரி 3-ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்கப் போகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாக இருக்கிறது.
சிம்புவின் பிறந்த நாளையொட்டி பட ரிலீஸ், புதுப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் என இரட்டை ட்ரீட் சிம்பு ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.