அதிக மெனக்கிடல் இல்லாமல் நடிக்கும் நடிகர்களில் சிம்புவும் ஒருவர்.
விரலை ஆட்டி ஆட்டியே ஆரம்பகால படங்களில் நடித்தவர் பிறகு நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதைத்தாண்டி ரெகுலரான நடிப்பை மட்டுமே கொடுத்து வந்தவர் தனது படங்களில் உடல் எடையை ஏற்றுவது, இறக்குவது மாதிரியான வித்தியாசமான கெட்டப்புகளையும், உடல் உழைப்பையும் நடிப்பில் போட்டதில்லை.
இருந்தாலும் சக நடிகர்களுடன் போட்டி போட வேண்டுமென்றால் சில விஷயங்களை செய்து தானே ஆக வேண்டும். அப்படி ஒரு வேலையில் தான் தற்போது இறங்கியிருக்கிறாராம் சிம்பு.
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார் சிம்பு. இதில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிப்பதால் ஒவ்வொரு கேரக்டருக்கும் வித்தியாசம் காட்ட ஆசைப்பட்ட இயக்குநர் ஆதிக் சிம்புவை ஒரு கேரக்டருக்காக 90 கிலோ வரை உடலை எடையை கூட்டச் சொல்லியிருக்கிறாராம். இன்னொரு கேரக்டருக்காக 70 கிலோ வரை உடல் எடைய ஏற்றச் சொல்லியிருக்கிறார்.
இரண்டுக்குமே ஓ.கே சொன்ன சிம்பு வெயிட்டை ஏற்றுவதற்கு ஒருமாதம் கால அவகாசம் கேட்டிருக்கிறார். இதனால் படப்பிடிப்பு மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
குண்டு சிம்பு எப்படி இருப்பாரோ..? நெனைச்சுப் பார்க்கவே பயமாயிருக்கு…