தமிழ்நாடு நல்லாத்தானே இருக்கு? : இது சிம்புவோட கணிப்பு

பீப் சாங் லீக்கான விஷயத்துக்கு பரிகாரம் தேட பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி பாடல் ஒன்றை வெளியிட்டார் நடிகர் சிம்பு.

போடு மாமா ஓட்டு போடு மாமா அது நம்மோட கடமை என்று சீரிய சிந்தனையுடன் அவர் அந்தப்பாடலை எழுதி பாடியிருந்தார்.

பீப் சாங் பாடலைக் கேட்டு சிம்புவை வறுத்தெடுத்தவர்கள் கூட சிம்புவின் இந்த பொறுப்புணர்ச்சியைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் பாராட்டினார்கள்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 11 மணி வரைக்கும் சிம்பு ஓட்டு போட வராததால் சூர்யா மாதிரியே அட்வைஸ் செய்து விட்டு வீட்டில் செட்டிலாகி விட்டாரோ என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

நல்லவேளையாக மதியத்துக்குப் பிறகு தனது தொகுதிக்கு உட்பட்ட தி.நகர் இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அப்போது பேசிய சிம்பு மாற்றம் எதற்கு தேவை? எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது. நேரம் ஆகிறது சீக்கிரம் வந்து வாக்களியுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

கேட்டுக்கங்க மக்களே தமிழ்நாட்டுல எல்லாமே நல்லாத்தான் இருக்காம்!

SimbuSTRTN Election 2016சிம்புதமிழ்நாடு தேர்தல் 2016
Comments (0)
Add Comment