இந்த ஜோடியெல்லாம் மீண்டும் சேரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இயக்குநர் பாண்டிராஜ் கதை சொன்னதும் பிடித்துப் போய் சிம்பு என்றும் பாராமல் அவரது சொந்த தயாரிப்பான இது நம்ம ஆளு படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடித்தார்.
படம் ஆரம்பிக்கும் போதே சிம்பு – நயன் தாரா ஜோடி ஒன்று சேர்வது ரசிகர்கள் மத்தியில் பரவியதால் படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டு முதலுக்கு மோசமில்லாத வசூலுடன் தப்பித்தது.
இதை டெக்னிக்கை புரிந்து கொண்ட சிம்பு இப்போது இதே பார்முலாவை தனது புத்துப்படத்திலும் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ஏற்கனவே ஒரு சிம்புவுக்கு ஸ்ரேயா நடித்து வருகிறார்.
இதே படத்தில் தான் இன்னொரு சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஹன்ஷிகாவை கேட்டுப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆனால் சிம்பு படமா? கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம் என்று தேடி வந்த வாய்ப்பை விட்டு விட்டாராம் ஹன்ஷிகா.
ஒரு தடவை பட்டது போதும், இனிமேலும் ஏமாறத் தயாரில்லை என்று சொல்லும் ஹன்ஷிகா சிம்பு படத்தில் நடிப்பதாக எந்த செய்தி வந்தாலும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
உஷாரான பொண்ணு!