‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பம் சோனி மியூசிக்கில் வெளியீடு!

பிரேக் அப் என்று அழைக்கப்படும் காதல் முறிவு என்றாலே சோகப்பாடல் தான் என்பதை மாற்றி அமைக்கும் முயற்சியாக எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பமாக ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’மார்ச் 21 அன்று சோனி மியூசிக்கில் வெளியாகிறது. முகேன் ராவ், தேஜு அஷ்வினி முன்னணி பாத்திரங்களாக தோன்றும் இந்த பாடலில் இமான் அண்ணாச்சி, தீபா மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

அஷ்வின் மற்றும் லாஸ்லியா நடிப்பில் பலரது இதயங்களை வென்ற ‘பேபி நீ சுகர்’ ஆல்பத்தின் வெற்றிக்கு பிறகு எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் மற்றும் மகேஷ் ராம் கே ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். மகத் நடித்த ‘இவன் தான் உத்தமன்’ திரைப்படத்தையும் மகேஷ் ராம் கே இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்திற்காக மிகவும் திறமை வாய்ந்த குழுவினருடன் மகேஷ் ராம் கே கைகோர்த்துள்ளார். பாடல் வரிகளை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, தரண் குமார் இசை அமைக்க, ‘கோப்ரா’ படத்தின் ஒளிப்பதிவாளரான ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவை கையாள, ஆர் சி பிரணவ் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார்.

actor Mugen RaoActress Teju AshwiniSingleAayitenD song