தன்னம்பிக்கையின் மறுபெயர் அஜித்! : சிவகார்த்திகேயன் சிலிர்ப்பு

திரை விழாக்களோ? தான் நடித்த படங்களின் புரமோஷன்களோ? எந்த ஒரு விழாவிலும் அஜித்தை யாரும் பார்க்க முடிவதில்லை.

மீடியாக்களை சந்தித்தே பல ஆண்டுகள் ஆகி விட்டது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவரை யாராவது பிரியப்பட்டு தேடிப்போய் சந்தித்தால் தான் உண்டு என்கிற நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அஜித்தை நேரடியாக அவரது வீட்டில் சந்தித்த ரகசியத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளர்களின் ‘கேரண்டி’ ஹீரோவான சிவகார்த்திகேயன்.

எப்படி இருந்தது அந்த சந்திப்பு அனுபவம்?

”அஜித் சாரை மீட் பண்ணனும்னு கேட்டப்ப வரச் சொல்லிருந்தாங்க… நான் போய் உட்காந்தேன். சார் பூஜையில் இருக்காங்கன்னு சொன்னாங்க. எனக்கு அப்பவே டென்ஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சு.

அஜித் சார் பேச ஆரம்பிச்ச விதத்தைப் பார்க்கிறப்போ அவரை வெளியில எவ்வளவு தூரத்துக்கு கொண்டாடுறாங்களோ அதுல ஒரு சதவீதம் கூட புகழை அவர் தன்னோட தலைக்குள்ள ஏத்திக்கவே இல்லை.

இன்னைக்கு அஜித் சாரோட பேரைச்சொன்னா 10 நிமிஷத்துக்கு கை தட்டல்களை கேட்டுக்கிட்டே இருக்கலாம். அந்த போதையும் அவர்கிட்ட இல்லை.

அந்த சந்திப்பு ஒரு நாலு மணி நேரம் வரை போச்சு. எனக்கு ஒண்ணுமே புரியல. சார் என்னை அவ்வளவு நேரம் உட்கார வெச்சு பேசணுங்கிற அவசியம் இல்லை. இதை நான் யார்கிட்டேயும் சொல்லல. ஏண்ணா அவர் ரொம்ப ஜென்யூன்னா பேசினார். அதை நாம் விளம்பரமாக்கிடக்கூடாதுங்கிறதுல ரொம்ப தெளிவா இருந்தேன்.

அந்த நாலு மணி நேரமும் எனக்கு அட்வைஸ் பண்ணல. அவரோட வாழ்க்கையில நடந்த விஷயங்களை என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டார். அதையெல்லாம் எப்படியாவது என்னோட வாழ்க்கையில கடைபிடிக்கணும்னு நெனைச்சேன்.

அவர்கிட்ட இருக்கிற தன்னம்பிக்கையை எடுத்துக்கலாம்னு இருக்கேன். உதாரணத்துக்கு ‘ஆலுமா டோலுமா’ சாங் எடுத்துக்கிட்டிருக்கும் போதே அடிபட்டுடுச்சு. ஆனாலும் ரெஸ்ட் எடுக்காம இல்ல இந்த சாங்க்கை நான் முடிச்சுக் குடுத்துட்டுத்தான் போவேன்னு முடிச்சு குடுத்தாங்க. அந்த தன்னம்பிக்கை தான் ஆச்சரியம்.

அவருக்கு நெறைய ஆபரேஷன் பண்ணிருக்காங்க. அதைப்பத்தியெல்லாம் கவலைப்படுறதே கெடையாது. ஸ்டண்ட் காட்சிகள்ல நடிக்கிறாங்க. அந்த ஒரு தன்னம்பிக்கை சினிமா துறையில மட்டும் இல்லை எல்லாத்துறையில் இருக்கிறவங்களுக்கும் கண்டிப்பா இருக்கணும்.

அவரை ஒரு நடிகர்ன்னு பார்க்காம ஒரு பெரிய பர்சனாலிட்டின்னு வெச்சு எல்லாத் துறையில இருக்கிறவங்களும் அந்த தன்னம்பிக்கையை ஃபாலோ பண்ணனும் என்று சிலிர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ajithAjithkumarsivakarthikeyanThalaஅஜித்அஜித்குமார்சிவகார்த்திகேயன்தல
Comments (0)
Add Comment