யாருடைய வெற்றியையும் நான் திருடவில்லை : ‘ரெமோ’ விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர்!

வ்வொரு மனிதனுடைய இமாலய வெற்றிக்குப் பின்னாலும் வெளியில் சொல்ல முடியாத வலிகளும், வேதனைகளும் நிரம்பியிருக்கும். அப்படி சொல்ல முடியாத வலிகளும், வேதனைகளும் தெரியாமல் போனதாலோ என்னவோ இன்றுவரை சிவகார்த்திகேயனை அதிர்ஷ்டத்தால் ஜெயிப்பவர் என்றுதான் தமிழ்சினிமாவில் பெருங்கூட்டம் ஒன்று முத்திரை குத்திக் கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பின்னர் அதே விஜய் டிவியின் தொகுப்பாளராக வேலை செய்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.

அன்று முதல் அவர் நடிப்பில் ரிலீசாகிற படங்கள் எல்லாமே ஹாட்ரிக் வெற்றி தான். மிக குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்கள் லிஸ்ட்டில் வந்ததாலோ என்னவோ அவர் திறமை மற்றவர்களின் பார்வையில் அதிர்ஷ்டமாக தெரிகிறது.

இருந்தாலும் அந்த விமர்சனங்களையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தனது நடிப்புத் திறமையை படங்களில் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் சென்ற 7-ம் தேதி ரிலீசான ரெமோ திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தன் மனதில் உள்ள குமுறல்களை கண்ணீரோடு கொட்டித் தீர்த்தார்… ப்ளீஸ்… எங்களை வேலை செய்ய விடுங்க…. நா தழுதழுக்க கேட்டுக் கொண்டார்.

“ஒரு மனுஷன் இந்தப் படத்தை ஆரம்பிச்சதுல இருந்து முடிவு வரைக்கும் அதை சரியா கொண்டு போய் நிறுத்தினார்னா அது தயாரிப்பாளர் ராஜா சார் தான்.

‘ரஜினி முருகன்’ ரிலீஸ் அன்னைக்கு ராஜா அண்ணனுக்கு போன் பண்ணினேன். தெரியலை சிவா, இன்னும் கன்ஃபர்ம் ஆகலைன்னு சொன்னாரு. படம் ரிலீஸ் அன்னைக்கு காலையில 7 மணிக்கு என் படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதான்னு ஒரு தவிப்பு இருக்கு பார்த்தீங்களா, எங்க டீமும், நாங்களும் எந்த தவறுமே செய்யாம நாங்க தவிச்ச தவிப்பு அது.

ஒரு படத்தை எடுத்துக்கிட்டு அதை சுத்தியே ஓடி ஓடி வேலை செஞ்சி அப்படி ஒரு வலி தேவையில்லை, அப்படி இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அப்படி எந்த ஒரு வலியையுமே கொடுக்காம நான் 18 மணி நேரம் ஷுட்டிங் போயிட்டு, நான் போயி என் குழந்தையோட விளையாடலாம்.

ஆனால், ராஜா அண்ணனை நான் அவர் ஃபேமிலியோட பார்க்கவே இல்லை. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.

“நிறைய புரொடக்‌ஷன் ஹவுஸ்ல நான் பார்த்திருக்கேன், இந்த டிசைனைக் கொடுங்க, அது விளம்பரத்துக்கு நல்லா இருக்கும்னு கெஞ்சிக்கிட்டேயிருப்பாரு. நிறைய கம்பெனியில அவரை வாசல்லயே நிப்பாட்டியிருக்காங்க. ஆனாலும், அந்த கம்பெனிக்காக மட்டுமே வேலை செஞ்சிருக்காரு. அவருக்கு ஏதாவது சொத்து இருக்கான்னு கேளுங்க, சொந்தமா கார் இருக்கான்னு கேளுங்க, கெடையாதுங்க.

இந்தப் படம் ரிலீசுக்கு எவ்வளவு பிரச்சனை பண்ணுவீங்க. அவரையும் சரி என்னையும் சரி. எங்களை வேலை செய்ய விடுங்க, கெஞ்சிக் கேக்கறேன் வேலை செய்ய விடுங்க, இன்னைக்கு வரைக்கும் அவர் தூங்கலை. நீங்க எல்லாருக்கும் ஏத்திக் கொடுத்தது தான் இந்த மேடை. எல்லாரையும் என்டர்டென் பண்ணலாம், தியேட்டர்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கும் போது ஆசையா இருக்கு.

நாங்க யார்கிட்டேயும் எதுவுமே கேக்கலை, உதவி எதுவுமே செய்ய வேணாம். உதவியோ ஆதரவோ கொடுக்கிறதுக்கு மீடியா இருக்காங்க, மக்கள் இருக்காங்க. ஆனா, வேலை செய்யறத தயவு செஞ்சி தடுக்காதீங்க. அதை எல்லாருக்கும் நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன். நீங்க எல்லாரும் உட்கார்ந்திருக்கிற இடத்துல இருந்து தான் நானும் இந்த மேடைக்கு ஏறி வந்திருக்கேன். உங்க எல்லாருக்குமே தெரியும் இந்த இடம் எவ்வளவு கஷ்டம்னு.

ஒரு நாள் நீங்க எல்லாரும் பெருமைப்படும்படியான ஒரு படத்தைக் கொடுப்பேன். ஒரு கம்பெனிக்கு ஒரு இயக்குனருக்கு முதல் படம் ரொம்ப முக்கியம். அதுக்கு நீங்க எல்லாரும் உறுதுணையா இருந்திருக்கீங்க. சில பேருக்கு வருத்தம் இருக்கலாம். ஏர்ற மேடையில எல்லாம் நான் அழுகிறேனேன்னு நினைக்கலாம்.

தப்பான விஷயம் செஞ்சால்தான் தப்புன்னு நினைக்கிறேன், நான் உண்மையா இருக்கிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யக் கூடாதுன்னு நினைக்கிறேன். எல்லாருமே அப்படித்தான் நினைக்கிறோம். இந்தக் கண்ணீரைத் தாண்டி ராஜா அண்ணனுக்கு என்ன திருப்பிக் கொடுக்கிறதுன்னு தெரியலை.

எல்லாரும் நினைக்கலாம், ரொம்ப ஹிட் வந்துட்டிருக்குன்னு. அதுதான் பெரிய பயத்தைக் கொடுக்குது. யார்கிட்ட இருந்தோ நான் இந்த ஹிட்டைத் திருடிட்டு வர்ற மாதிரியே நினைக்கிறாங்க, அப்படி கிடையவே கிடையாது. ரொம்ப போராடி, போராடித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ஆறு மாசம் நான் சும்மா உட்கார்ந்திருக்கேன். அந்த நேரத்துல இரண்டு படம் பண்ணியிருக்கலாம், ஆனால் அப்படி பண்ண விருப்பமில்லை.

தினமும் 20 மணி நேரம்லாம் ஷுட் பண்ணியிருக்கேன், டயர்டா இருந்திருக்கேனே தவிர, சோகமா இருந்ததில்லை. ஹிட், சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர், சரியில்லைனு எல்லாத்தையும் நீங்க சொல்லுங்க,” என உணர்ச்சிபூர்வமாகப் பேசினார் சிவகார்த்திகேயன்.

எந்த ஒரு வெற்றியும் எளிதாக வந்து விடுவதில்லை என்பதற்கு உதாரணம் சிவகார்த்திகேயன்.

24 AM StudioKeerthi SureshR.D.RajaREMORemo Success Press MeetRemo Thanks Giving Meetsivakarthikeyan
Comments (0)
Add Comment