‘எஸ்.கே 14’ ஆரம்பம் – விஞ்ஞானத்தோடு விளையாடக் கிளம்பிய சிவகார்த்திகேயன்!

‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்து தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகிறது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது.

அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், இன்று ஜூன் 27-ம் தேதி அப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

எப்போதுமே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இதில் கொஞ்சம் வித்தியாசமாக விஞ்ஞானத்தோடு விளையாடப் போகிறார். ஆமாம், இந்தப் படத்தின் கதை விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதை.

படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக இருப்பதாகச் சொல்லப்படும் இந்தப்படத்தையும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

sivakarthikeyanSK 14SK 14 Movie Launch
Comments (0)
Add Comment