பிரைம் வீடியோவில் வெளியான”ஸ்னேக்ஸ் & லாடர்ஸ்”டிரெய்லர்!

இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹியூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும், 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யேகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

நடிகர் நவீன் சந்திரா தனது கதாபாத்திரம் குறித்த தனது நுண்ணறிவை பகிர்ந்து கொண்டு கூறினார்,

“அதன் எதிர்பாரா திருப்பங்கள், தீவிரமான கதாபாத்திரங்களின் இயக்க ஆற்றல் மற்றும் அடுக்கடுக்காக வெளிப்படும் மர்மங்கள் நிறைந்த கதைக்களத்தைக் கொண்ட இந்தத் தொடர், சாகசம், டிராமா மற்றும் மர்மம் ஆகியவற்றின் சில்லிடவைக்கும் ஒரு அற்புதமான கலவையாகும். அனைவரையும் முழுமையாக கவர்ந்திழுக்கும் என் கதாபாத்திரம் கதைக்கு ஒரு உத்வேகத்தை அளித்து தொடர் முடியும் வரை முழுவதுமாக பார்வையாளர்களை கட்டிப்போட்டுவிடும். விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இன்ஸ்பெக்டர் ரிஷியின் குறிப்பிடத்தக்க அமோக வெற்றிக்குப் பிறகு, பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நட்பு, ஆபத்து மற்றும் தன்னை அறிதலின் உணர்வுகள் நிறைந்த ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரை அனைவரும் ஆழ்ந்து அனுபவிப்பதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!”

Actor Naveen ChandraKarthik SubbarajSnakesandLadders webseries