அந்த நஷ்டங்களை சரிசெய்ய வெளிக்கம்பெனி படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதுப்படத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே தனுஷை வைத்து தொடரி படத்தை தயாரித்த இந்த நிறுவனம் இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைந்திருக்கிறது. ‘எதிர் நீச்சல்’ , ‘காக்கிச்சட்டை’ , ‘கொடி’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்த நடிகை சினேகா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் தனுஷுடன் இரண்டாவது முறையாக நடிக்கிறார். ‘அனேகன்’, ‘மாரி’, ‘மாரி 2’ படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார்.
‘வடகறி’, ‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்த ‘ஒரசாத’ பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை உரசிச் சென்ற விவேக் மெர்வின் ஆகியோர்
இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். மார்ச் 7 முதல் குற்றாலத்தில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. வரும் ஏப்ரலில் படத்தை
இந்தப் படத்திற்கு பிறகு தனுஷ் – ‘ராட்சசன்’ படப்புகழ் ராம்குமார் இணையும் படத்தையும் அடுத்து தங்களது 35-வது தயாரிப்பாக தயாரிக்க இருக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.