உதயநிதி படங்களில் நாயகி இருக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக காமெடி செய்ய சந்தானம் இருப்பார். இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அந்த காமெடி காம்போவுக்காகவே ஹிட்டானது.
இருந்தாலும் இந்தக் காமெடி கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைவதை தவிர்த்து விட்டனர்.
குறிப்பாக காமெடி செய்து கொண்டிருந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்வதை தவிர்த்து வருகிறார்.
‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ என அவர் ஹீரோவாக நடிக்கின்ற படங்கள் ஹிட்டாக ஆரம்பித்திருப்பதால் இனி தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
இப்படி சந்தானம் காமெடி கலந்த சீரியஸான ஹீரோ கேரக்டர்களில் நடிக்க ஆரம்பிக்க, கெத்து, மனிதன் போன்ற சீரியஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்த உதயநிதி மீண்டும் காமெடிப் படங்களாகப் செலெக்ட் பண்ணி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
எழில், கௌரவ் ஆகியோரின் படங்களைத் தொடர்ந்து பொன்ராமிடம் இணை இயக்குநராக இருந்த தளபதி என்பவரின் காமெடிக் கதையில் நடிக்க இருக்கிறார் உதயநிதி.
தேனாண்டாள் ஃபிலிம்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறாராம். சந்தானம் இல்லாததால் மூன்று படங்களிலுமே சூரியைத்தான் காமெடிக்கு பார்ட்னராக வைத்திருக்கிறார் உதயநிதி.
செம காமெடிங்க…!