”வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘காக்கி சட்டை’ என சிவகார்த்திகேயனுக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கும் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகி வருகிறது.
அவர்கள் இருவரும் ஜோடி சேருகிற படங்கள் செண்டிமெண்ட்டாக ஹிட்டாகி வருவதால் தான் நடித்து வரும் ‘ரெமோ’ படத்திலும் ஒரு ஹெஸ்ட் ரோலில் நடிக்கச் சொல்லி ஸ்ரீதிவ்யாவை கூப்பிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்துக் கொடுத்த ஸ்ரீதிவ்யா அதற்காக நையா பைசா கூட சம்பளம் வாங்கவில்லை.
சின்ன ரோல் தானே? அதுக்கெதுக்கு சம்பளம்? என்று தயாரிப்பு தரப்பில் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து விட்டாராம் ஸ்ரீதிவ்யா.
இதே ஸ்ரீதிவ்யா தான் சென்னை மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொண்ணுக்கு பூப்போல மனசு!