வெளுத்து வாங்குது கீர்த்தி சுரேஷ்! : வேற வழியில்லாம புலம்புது ஸ்ரீதிவ்யா!

சில மாதங்களுக்கு முன்பு வரை ஸ்ரீ திவ்யா தான் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் ‘பெஸ்ட் சாய்ஸ்’ ஆக இருந்தார்.

ஆனால் பல சிக்கல்களையும் தாண்டி ‘ரஜினி முருகன்’ ரிலீசானாலும் ஆனது. படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டு விட்டது.

இதனால் எல்லோருடைய பார்வையும் அப்படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பக்கம் திரும்பியிருக்கிறது.

அதோடு ‘தளபதி 60’ வது படத்திலும் விஜய்க்கு ஜோடியாகி விட்டதால் அவருக்கு போட்டியாளராக கருதப்பட்ட ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் மொத்தமாக காலியாகத் தொடங்கி விட்டதாம்.

அரை டஜன் படங்களை வைத்துக்கொண்டு தெம்பாக இருந்த ஸ்ரீதிவ்யா கைவசம் இப்போது வெறும் மூன்றே மூன்று படங்கள் தான் இருக்கிறது.

இதனால் கீர்த்தியின் போட்டியை சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவர், வேறு வழியில்லாமல் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் புலம்பிக் கொண்டே சம்பளத்தை கணிசமாக குறைத்து கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்.

 வெளுத்து வாங்குது கீர்த்தி சுரேஷ்! : வேற வழியில்லாம புலம்புது ஸ்ரீதிவ்யா!

Keerthi SureshSri DivyaThalapathy 60Vijay 60கீர்த்தி சுரேஷ்தளபதி 60விஜய் 60ஸ்ரீதிவ்யா
Comments (0)
Add Comment