ரஜினி ஒரு 420 : சொல்லிட்டார்யா ”டெல்லி பொறுக்கி” சு.சாமி

ஜினி பி.ஜே.பியுடன் நெருக்கமாக இருக்கிறாரா? இல்லையா? என்பது தான் அவருடைய ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கும் பெருங்குழப்பம்.

அந்தக் கட்சியிலிருக்கும் மற்ற தலைவர்கள் ரஜினியை விமர்சிப்பதை செய்வதில்லை என்றாலும் அதே கட்சியைச் சேர்ந்த சு.சாமி தொடர்ச்சியாக ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் விமர்சித்து வருகிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் சு.சாமிக்கும், ரஜினி ரசிகர்களுக்கு அவ்வப்போது கருத்து மோதல் உருவாகி வருகிறது.

இப்படி ரஜினி என்ன செய்தாலும் எதையாவது கருத்து என்கிற பெயரில் மட்டரகமாக விமர்சிக்கும் சு.சாமி மீண்டும் அப்படிப்பட்ட இழிவான கருத்து மோதலை உருவாக்கியிருக்கிறார்.

உடல் பரிசோதனை செய்ய சென்ற வாரம் அமெரிக்கா சென்றார் ரஜினி. அங்கு உடல் பரிசோதனை நேரம் போக மற்ற நேரங்களில் நண்பர்களுடன் உரையாடுதல், தமிழக அரசியலைப் பற்றி ஆலோசனை செய்வது உள்ளிட்ட பல விஷயங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்.

அங்கு ரஜினி கிளப் ஒன்றில் கேசினோ விளையாடி கொண்டிருப்பது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்ட சு.சாமி ”வாவ் ரஜினிகாந்த் 420 அமெரிக்கா சூதாட்ட விடுதியில் தனது உடல்நலனை முன்னேற்றுகிறார். அவரிடம் பணம் எப்படி வந்தது என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்” என விமர்சித்திருக்கிறார்.

இதைப் பார்த்ததும் கடுப்பான ரஜினி ரசிகர்கள் ”எங்கள் தலைவரைப் பற்றி தொடர்ந்து விமர்சிப்பது உங்களுக்கு நல்லதல்ல ”டெல்லி பொறுக்கி” சு.சாமி”  என்று பதிலடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

2 Point 0AmericarajiniRajinikanthsubramanian swamy
Comments (0)
Add Comment