முத்தலா ஒரு ஹீரோயின்! : பூனம் பாஜ்வாவை டிக் செய்த சுந்தர்.சி

லையாளத்தில் வெற்றி பெற்ற ‘வெள்ளி மூங்கா’ என்ற படத்தை தமிழில் முத்தின கத்தரிக்கா என்ற டைட்டிலில் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

படத்தில் அவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்க அவர்களுடன் சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, வைபவ், சிங்கப்பூர் தீபன், ரவிமரியா, யோகி பாபு உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடித்துள்ளது.

வழக்கம் போல தானே நடித்து இயக்காமல் தனது உதவியாளர் வேங்கட் ராகவனுக்கு இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் சுந்தர் சி.

படம் குறித்து அவர் நேற்று நம்மிடம் பேசியபோது :

ஒரு நாள் நைட்ல மலையாளப்படம் பார்க்கலாமேன்னு பிஜூமேனன் நடிச்ச ‘வெள்ளி மூங்கா’ன்னு ஒரு படம் பார்த்தேன். பத்து நிமிஷம் தான் பார்த்திருப்பேன். படம் முடியிற வரைக்கும் என்னை அங்க இங்க திரும்ப விடல. நான் நெறைய காமெடிப் படம் பண்றவன் என்னையே அந்தப்படம் ரொம்ப சிரிக்க வெச்சது. படம் முடியும் போது ஒரு பீல் குட் பீலிங் வந்துச்சு. அப்பத்தான் இந்தப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணனும்னு முடிவு பண்ணினேன்.

ஏன்னா 2010 தலைநகரம் படத்துக்கு அப்புறம் எனக்கு நடிப்புல ஆர்வம் போயிடுச்சு. மறுபடியும் டைரக்‌ஷன் பக்கம் வந்துட்டேன். இனிமே நடிக்கவே கூடாதுன்னு நெனைச்சேன். ஆனா இந்தப் படத்தை பார்த்தப்ப மறுபடியும் நடிக்கிற ஆசை வந்துடுச்சு.

என்று சொன்ன சுந்தர் சி தனது உதவியாளர் வேங்கட் ராகவனுக்கு இயக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

மேலும் ”இந்தப் படத்துல நான் 40 வயசான ஆள் கேரக்டர்ல நடிக்கிறேன். எனக்கும் ஹீரோயினுக்கும் நெறைய வயசு வித்தியாசம் இருக்க வேண்டும் என்றாலும் அது அவ்வளவாக தெரியக் கூடாது. அதே சமயம் படத்திற்கு ஏற்ற குடும்ப பாங்கான ஹீரோயின் வேண்டும். அப்படியே கொஞ்சம் கிளாமரும் வேண்டும். எனவே எல்லாம் சரியாக இருந்ததால், பூனம் பஜ்வாவை ஹீரோயினாக செலெக்ட் பண்ணினேன்” என்றார் சுந்தர் சி.

Muthina KathirikaiMuthina Kathirikai Audio LaunchPoonam Bajwa முத்தின கத்தரிக்கா ஆடியோ ரிலீஸ்Sundar.C Speechசுந்தர்.சிபூனம் பாஜ்வாமுத்தின கத்தரிக்கா
Comments (0)
Add Comment