சூர்யா, கெளதம் மேனன் – மீண்டும் இணையும் ‘சண்டைக்கார’ கூட்டணி!

‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ என வெற்றிப் படங்களைக் கொடுத்த கூட்டணி சூர்யா – கெளதம் மேனன் கூட்டணி.

மீண்டும் இந்தக் கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் தான் ’துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை ஆரம்பித்தார் கெளதம் மேனன்.

பூஜையெல்லாம் போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை சரியில்லை என்றும், அதில் சில திருத்தங்களை செய்யுமாறும் கெளதம் மேனனிடம் சூர்யா கூறினார்.

அதற்கு கெளதம் மேனன் மறுக்கவே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப்படம் ட்ராப் ஆனது. அதன்பிறகு அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கினார் கெளதம் மேனன்.

இதற்கிடையே சூர்யா நடிக்க மறுத்த துருவ நட்சத்திரம் படத்தில் தற்போது விக்ரம் நடித்திருக்கிறார். அந்தப்படம் முடிந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்த சண்டைக்கார கூட்டணியான சூர்யா – கெளதம் மேனன் வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு புதுப்படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சமீபத்தில் சூர்யாவை சந்தித்த கெளதம் மேனன் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை பிடித்து போகவே சூர்யாவும் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.

Comments (0)
Add Comment