கார்த்தி ரூட்டு தான் பெஸ்ட்! : சூர்யா அதிரடி முடிவு

சூர்யாவும் என்னவெல்லாமோ புதிய புதிய கதைகளைக் கேட்டு நடித்து தான் பார்க்கிறார் ஆனால் ரிலீசாகிற எல்லாப் படங்களும் அவரது மார்க்கெட்டுக்கு கேடு விளைவிப்பதாகத் தான் இருக்கிறது.

சிங்கம் படத்துக்குப் பிறகு சூர்யாவின் பேர் சொல்லும் படி எந்தப்படமும் அமையவில்லை. நிறைவாக வந்த 24 திரைப்படமும் டெக்னிக்கலாக நல்ல சவுண்ட் உள்ள படமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதனால் சூர்யாவுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.

இதை உணர்ந்ததாலோ என்னவோ? தனது அடுத்த படத்திலிருந்து ரூட்டை மாற்ற முடிவு செய்திருக்கிறார் சூர்யா.

ஆமாம், இதுவரை சிட்டி சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து வந்த சூர்யா இனிமேல் தம்பி கார்த்தியைப் போல கிராமத்து கதைகளிலும் நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

அந்த வகையில் இயக்குநர் முத்தையாவின் இயக்கத்திலும் கிராமத்து பின்னணி படத்தில் நடிக்கப்போகிறார்.

அப்பா – மகன் உறவைச் சொல்லப் போகும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மெட்ராஸ் இயக்குநர் ரஞ்சித்தின் படத்தை முடித்ததும் இந்தப்படத்தில் நடிப்பார் சூர்யா.

நல்ல முடிவு!

KarthiS 3Suriyaகார்த்திசிங்கம் 3சூர்யா
Comments (0)
Add Comment