மீண்டும் இணைந்த சுசீந்திரன் – யுவன் வெற்றிக் கூட்டணி!

யக்குனர் சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி ”நான் மகான் அல்ல” , ”ஆதலால் காதல் செய்வீர்” என்று ரசிகர்களிடம் நல்ல பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் இணைந்து ஒன்றாக பணியாற்றியுள்ளது.

இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ”ஜீனியஸ்” என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து வரிகளில், ”விஜய் சூப்பர் சிங்கர்” இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது. சூப்பர் சிங்கரில் ஸ்ரீகாந்தின் திறமையை பார்த்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கண்டிப்பாக தன்னுடைய இசையில் பாட இவருக்கு வாய்ப்பு தருவேன் என்று கூறியுள்ளார்.

சிறப்பான கதை கொண்ட படத்துக்கு, பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் ”ஜீனியஸ்” படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்து விட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

இப்படத்தை ”சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ்” சார்பில் ரோஷன் தயாரித்து நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீ-ரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தை செப்டெம்பர் மாத இறுதியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

GeniusSuseenthiran Yuvan Shankar Raja
Comments (0)
Add Comment