பிரைம் வீடியோ வெளியிட்ட சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பம்!

 சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது.

18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறது

*இந்த ஆல்பத்தில் அடங்கியுள்ள பாடல்களின் பட்டியல் இங்கே:*

1. ஆலங்கட்டி மழை (சாம் CS உருவாக்கி இசையமைத்த பாடல் வரிகளை கபில் கபிலன் பாடியுள்ளார்)
2. ஆம்பூர் தம் பிரியாணி (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைக்க, பாடலுக்கு ஆண்டனி தாசன் குரல் கொடுத்துள்ளார்)
3. சாயா கோபுரமே (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைத்து குரல் கொடுத்துள்ளார்)
4. சில்லா சில்லா (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைத்து குரல் கொடுத்துள்ளார்)
5. அஷ்டகாளி (சாம் CS பாடல் வரிகளை எழுதி இசையமைத்து, திவாகருடன் இணைந்து குரல் கொடுத்துள்ளார்)
6. அரக்கன் அரங்கேற்றம் (பாடல் வரிகளை விவேகா எழுத சாம் CS இசையமைத்து பாடியுள்ளார்)
7. சூரசம்ஹாரம் (பாடல் வரிகளை விவேகா எழுத சாம் CSஇசையமைத்து பாடியுள்ளார்)
8. நாககன்னி பாடல் (பாடல் வரிகளை சாம் CS எழுதி இசையமைத்து பாடியுள்ளார்)
9. மாடனே சுடலை மாடனே (பாடல் வரிகளை சாம் CS எழுதி இசையமைத்து பாடியுள்ளார்)
10. தி சேஸ்
11. தி கமென்ஸ்மெண்ட்
12. தி ஜெனிசிஸ்
13. தி லாங்கிங்
14. தி பெனிட்டென்ஷியரி
15. தி ரெடீமர்
16. தி சால்வேஷன்
17. தி சீக்ரெட்
18. தி டன்னல்

சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.

actor kathirActress Aishwarya RajeshSuzhal the vortex2 webseries