ஊடகப் பெண்களைப் பற்றி எஸ்.வி.சேகரின் கீழ்த்தரமான பேச்சு! – பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்

த்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டு மக்களை எப்போதும் பரபரப்பான மன நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு.

அப்போது தான் அந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில் கார்ப்பரேட் களவாணிகளுக்கு சேவகம் செய்து அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி மக்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள்.

குறிப்பாக காவிரி பிரச்சனையில் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கொந்தளிப்பான மனநிலை இருந்து வருகிறது.

இந்த சுழலில் தமிழக பி.ஜே.பியைச் சேர்ந்த ஹெச்.ராஜா தொடர்ச்சியாக கீழ்த்தரமாக கருத்துகளை பொதுவெளியில் வைத்து எப்படியாவது தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை காவிரிப் பிரச்சனையிலிருந்து திசை திருப்பி விட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள்.

காவிரி பிரச்சனையை மறக்கடிக்க பேராசிரியர் நிர்மலா தேவி பிரச்சனையை பொதுவெளியில் பரப்பி விட்ட பி.ஜே.பியினர், பின்னர் அது சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தைப் பிடித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் கவர்னர்.

அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் பன்வாரிலால் பதறிக் கொண்டிருக்க, ஹெ.ராஜா கருணாநிதி மகள் கனிமொழியை தரக்குறைவாக விமர்சனம் செய்து பிரச்சனையை திசை திருப்பினார்.

அந்தச் சூடு ஆறுவதற்குள் தற்போது வாண்ட்டட் ஆக வந்து பிரச்சனையில் தலையைக் கொடுத்து ஊடகத்தினரின் கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறார் எஸ்.வி.சேகர்

தன் கட்டிய பொண்டாட்டிக்கே விசிட்டிங் கார்டு கொடுக்கிற ஈனப்பிறவி தான் எஸ்.வி.சேகர். அப்படிப்பட்டவர்கள் ஊடகப் பெண்களைப் பற்றி மிக மிக கீழ்த்தரமாக கருத்துகளை பதிவு செய்வது அவருடைய தரத்தைக் காட்டுவதாக கொந்தளித்திருக்கிறார். இந்த மட்டமான கருத்துகளைச் சொன்ன எஸ்.வி.சேகரை கடுமையாக கண்டித்திருக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவு இதோ –

Chennai Journalistsh rajaJournalists AngrySV ShekarSV Shekar FacebookTamilnadu BJP
Comments (0)
Add Comment