கல்லூரி மாணவிகளின் பாடகி கனவை நிறைவேற்றிய இசைஞானி இளையராஜா!

சைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ராணி மேரி கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.

பாடி அசத்திய அந்த மாணவிகள் நாங்கள் சினிமாவில் பாட முடியுமா? என்று மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்.

அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

அதன்படி எஸ்.என்.எஸ் பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘தமிழரசன்’ படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாட வைத்து அறிமுகப்படுத்தி உள்ளார்.

IlayarajaTamilarasanVijay Antony
Comments (0)
Add Comment