சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான ’மக்கள் ஆய்வு’ எனும் அமைப்பு தேர்தலை முன்னிட்டு அரசியல், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் கருத்து கணிப்பு நடத்தியது.
அதில் உங்கள் அபிமான நடிகர் யார்? என்கிற கேள்விக்கு 16 சதவீதம் பேர் அஜித் என்று தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுகிற ரஜினிகாந்த்தை 15.9 சதவீதம் பிடித்திருப்பதா சொல்லியிருக்கிறார். இதன் மூலம் அவர் இரண்டாவது இடத்துக்கு போயிருக்கிறார்.
9.2 சதவீதம் பேர் விஜயையும், 5.9 பேர் கமல்ஹாசனையும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பில் சூர்யாவுக்கு 4.3 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.