போயும் போயும் இதுலயா ‘அடிக்ட்’ ஆகணும் டாப்ஸி?

சுண்டக் கூட செய்ய வேண்டாம், லேசாக விரலைப் பிடித்து அழுத்தினாலே சிவந்து விடுகிற அளவுக்கு மேனியில் கலரை கொட்டி வைத்திருப்பவர் டாப்ஸி.

லாரன்ஸின் ‘காஞ்சனா 2’ படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டுமில்லாமல் ஏகப்பட்ட பட வாய்ப்புகளையும் கொண்டு சேர்த்திருக்கிறது.

மொத்த ரசிகர் கூட்டமும் காஞ்சனாவைப் பார்த்து மிரண்டு போயிருக்க, டாப்ஸியோ ஆன் லைன் ஷாப்பிங்கில் ‘அடிக்ட்’டாகி கிடக்கிறாராம்.

பொதுவாகவே நடிகைகளுக்கு ஷாப்பிங் செய்வது என்பது கொள்ளைப் பிரியம். ஒரு கடைக்குள் நுழைந்தால் லட்சக்கணக்கில் பில் போடாமல் வர மாட்டார்கள்.

ஆனால் டாப்ஸி இருக்கும் பிஸியில் அவருக்கு கடைகளுக்கு விசிட் செய்யவெல்லாம் நேரமில்லை. அதனால் ஹாபியாக ஆன்லைனின் தனக்கான அழகு சாதனப் பொருட்களை வாங்க ஆரம்பித்தவர் இப்போது முழு நேரமும் அதிலே தான் மூழ்கிக் கிடக்கிறாராம்.

ஒரு டிஸ்யூ பேப்பர் வேண்டுமென்றாலும் அதில் ஆர்டர் செய்கிற அளவுக்கு அடிக்ட்டாகி விட்டாராம்.

போயும் போயும் இதுலயா ‘அடிக்ட்’ ஆகணும் டாப்ஸி?

Online ShoppingTapsee
Comments (0)
Add Comment