மூன்று மொழிகளில் ஹீரோவாக களமிறங்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!

ரெட் கார்பட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் மிகப்பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படத்திற்கு ‘டீம் 5’ என்று பெயரிட்டுள்ளார்.

பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக கால்பதிக்கிறார். நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் மலையாளத்தின் முன்னணி நாயகியான பேர்லேமேனி இன்னொரு நாயகியாகவும், மாராட்டியின் முன்னணி நடிகரான தேஷ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, இயக்குகிறார் சுரேஷ் கோவிந்த். அவரிடம் படத்தைப் பற்றிக் கேட்டபோது ”இந்த படம் இந்திய சினிமாவிற்கு புது மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். பைக் ஸ்டன்டை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பைக் ஸ்டண்ட் ஒரு தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த விஷயம் மக்களுக்கு பெரிதாக போய் சேரவில்லை. இந்த படத்தின் மூலம் இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்று மக்களுக்கு தெரிய வரும்.

ஒரு குழுவிற்கு ஐந்து பேர் இருப்பார்கள். இது போல் பல குழுக்கள் இருக்கும். அதில் ரேஸ், வீலிங் போன்ற சாகசங்களும் இடம்பெறும். இதில் வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஸ்ரீசாந்த், நிக்கி கல்ராணி, பேர்லேமேனி, தேஷ் பாண்டே இந்த நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் மற்றும் காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்து உருவாகி வருகிறது.

படம் ஜூன் மாதம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகிறது. படப்பிடிப்பு கொச்சி, பெங்களூர், கோவா, ஆஸ்த்ரேலியா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. புது மாதிரியான எந்த கதையையும் மக்கள் வரவேற்பார்கள். இந்த கதையையும் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்றார் இயக்குனர் சுரேஷ்கோவிந்த்.

Nikki GalraniSreesanthTeam 5Team 5 Movie News
Comments (0)
Add Comment