‘தேரே இஷ்க் மே’ படத்திற்காக வாரணாசியை ஒளிரச் செய்த தனுஷ்!

தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் மற்றும் AR ரஹ்மானின் மனதை வருடும் பாடல்களால், நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன.

படம் பிரம்மாண்டமாக வெளியாவதை முன்னிட்டு, நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் க்ரிதி சனோன், இயக்குநர் ஆனந்த் L ராயுடன் வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோரின் இந்த பயணத்திற்கு உத்வேகம் அளித்த காசி நகரம், இருவரின் மனதிலும் நீண்ட காலமாக ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

அவர்களின் வருகை, ரசிகர்களின் உற்சாகமான கொண்டாட்டமாக மாறியது. நட்சத்திரங்களை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. முதலில், மூவரும் வாரணாசியில் உள்ள ஒரு திரையரங்கில் உள்ளூர் ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து, ‘தேரே இஷ்க் மே’ உருவான விதம், திரைக்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான கதைகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Actor DhanushActress Kriti Sanondirector Anand L RaiTere Ishk Mein movie