கசிந்தது ‘தானா சேர்ந்த கூட்டம்’ சீக்ரெட்? : விக்னேஷ் சிவன் அதிர்ச்சி

‘அஞ்சான்’ படத்திலிருந்து ’24’ வரை தொடர் தோல்விகளை சந்தித்து வருகிற சூர்யாவுக்கு ஹரியின் ‘எஸ் 3’ படம் தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அது ஒருபுறமிருக்க 24 படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யா கமிட் செய்யும் கதைகள் எல்லாமே வித்தியாசமானதாகவும், புதிய முயற்சிகளாகவும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

அப்படித்தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் சூர்யா.

முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இப்போது இப்படத்தின் கதையே ‘ஸ்பெஷல் – 26’ என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக் தான் என்கிற புதிய தகவல் கசிந்திருக்கிறது. இப்படி கசிந்த செய்தி சூர்யா அப்செட்டாக, விக்னேஷ் சிவனோ அது ஹிந்திப்படத்தின் ரீமேக் இல்லவே இல்லை என்று மறுத்து வருகிறார்.

ஆனால் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து படக் காட்சிகளை உற்று நோக்கும் படக்குழுவினர் அத்தனை பேரும் இது ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கத்தரிக்காய் முத்தட்டும், கடைத்தெருவுக்கு வந்ததும் ரசிகர்கள் பார்த்துப்பாங்க…

Special 26SuriyaThaana Serndha KoottamVignesh Sivan
Comments (0)
Add Comment