சி.பி.ஐ அதிகாரியாக மிரட்டும் விஜய்! – ‘தளபதி 63’ சீக்ரெட்

தொடர்ந்து ‘ஈயடிச்சான் காப்பி’ சர்ச்சையில் சிக்கி வரும் இயக்குனர் அட்லீயுடன் அடுத்த படத்தில் விஜய் இணைய மாட்டார் என்பது தான் பலருடைய நம்பிக்கையாக இருந்தது.

ஆனால் அந்த நம்பிக்கையை நேற்று பொய்யாகிப் போனது.

பல சர்ச்சைகளுக்கு நடுவே ‘சர்கார்’ தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் விஜய்யின் 63-வது பட அறிவிப்பு நேற்று வெளியானது.

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த பட வாய்ப்பை மீண்டும் அட்லீக்கே கொடுத்திருக்கிறார் விஜய். இந்த வெற்றிக் கூட்டணி இணையும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடிக் கேரக்டரில் நடிக்கிறார் விவேக்.

மேலும் படத்தில் வேலை செய்யும் ஒளிப்பதிவாளர் உட்பட பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘மெர்சல்’ படத்தில் பணிப்புரிந்தவர்கள்.

வழக்கம் போல அதிக பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் நாட்டையே உலுக்கிய ஒரு ஊழல் வழக்கை விசாரிக்கும் நேர்மையான சி.பி.ஐ அதிகாரியாக வருகிறார் விஜய் என்று கூறப்படுகிறது.

படம் இந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டாலும், படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு 2019 தீபாவளி அன்று தான் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

AtleeThalapathy 63Thalapathy Vijayvijay
Comments (0)
Add Comment