இதுவா ‘தளபதி 63’ படத்தின் டைட்டில்? – குழப்பத்தில் ரசிகர்கள்

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கப் போகும் படத்தை மீண்டும் அட்லீயே இயக்கப் போகிறார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை தளபதி 63 என்றே குறிப்பிட்டு வருகின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முன்னதாக டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்துக்கு ஆளப்போறான் தமிழன் என்பது தான் டைட்டில் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்தப் படத்துக்கு ‘ஜெர்ஸி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.

டைட்டிலைப் பார்த்த இதுதான் படத்தின் டைட்டிலா என்று ஒருபுறம் குழம்பிப் போயிருக்க மறுபுறம் இந்தப் படம் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாக இருக்குமோ? என்றும் யோசிக்கத் துவங்கியுள்ளனர்.

ஆனால் ‘ஜெர்ஸி’ என்பது தான் படத்தின் டைட்டில் என்று தயாரிப்பு தரப்பிலிருந்தோ அல்லது இயக்குனர் தரப்பிலிருந்தோ உறுதிப்படுத்தப்படவில்லை.

AtleeThalapathy 63vijayVijay 63
Comments (0)
Add Comment