ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். கதை திரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன் இயக்கியிருக்கிறார். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர் . தொழில் துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார்.
தண்டகன் என்பவனின் தீய குணம் கொண்ட ஒருவனால் பல கொடூரமான செயல்கள் மூலம் இந்த சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்பதை மிக சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்த தண்டகன் திரைப்படம். பார்ப்பவர்களை ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாமல் மிகவும் விறுவிறுப்பான படமாக அமைந்துள்ளது என பட குழுவினர் தெரிவித்தனர்.
இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி , ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்ய, ஷ்யாம் மோகன் இசையமைக்கிறார். படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கை மோகன் ராஜன் எழுத ஒன்றை இயக்குநர் எழுதி இருக்கிறார். சிக்கலான ஒரு கதையை எளிமையான திரைக்கதை மூலம் சுவாரசியப் படுத்திருக்கிறார் இயக்குநர். சலிப்புக்கும் தொய்வுக்கும் இடமில்லாத விறுவிறுப்பான திரைக்கதையால் பார்ப்பவர்களைக் கவரும் படமாக உருவாகி வருகிறது ‘தண்டகன்’. இப்படத்தை விரைவில் திரையில் வெளியிட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.