ஜன-3ல் வெளியாகும் ‘தி பெட்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வரும் ஜன-3ஆம் தேதி வெளியிடுகிறார்.

actor srikanthActress Srushti DangeDirector Mani Bhaarathithe bed movie