ஏப்ரல் 20 முதல் புதுப்படங்களின் படப்பிடிப்பும், ரிலீசும் ஆரம்பம் – விஷால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்ச் 1-ம் தேதி ஆரம்பித்த தமிழ்த்திரையுலகின் வேலை நிறுத்தம் ஏப்ரல் 17-ம் தேதி முடிவுக்கு வந்தது.

அதன்பின்  நேற்று ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அதில் பேசிய விஷால் ”தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த பெப்ஸி தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படபிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம்.
சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும். காலா படம் வெளியீடு தள்ளிப் போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது.

காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழ018

Producer Counciltamil cinemaTFPCvishal
Comments (0)
Add Comment