நெட்ஃபிக்ஸ் இன்று “தி கிரே மேன்” படத்தில் நடிகர் தனுஷ் பங்க்கேற்கும் ஒரு அதிரடி சண்டை காட்சி துணுக்கை வெளியிட்டுள்ளது. இதில் கோர்ட் ஜென்ட்ரி (ரியான் கோஸ்லிங்), எனும், சியரா சிக்ஸ் மற்றும் ஏஜென்ட் டானி மிராண்டா (அனா டி அர்மாஸ்) ஆகியோருடன் தனுஷ் நேருக்கு நேர் சண்டையிடும் காட்சி வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த உக்கிரமான சண்டைக் காட்சி ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. சூப்பர் ஸ்டார் தனுஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு கில்லிங்க் மிஷின், யாராலும் தடுக்க முடியாதவர் ஆனால் கொள்கையற்றவர் அல்ல. தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் “தீவிரமான சக்தி” என்று விவரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த தி கிரே மேன் பிரீமியரின் பத்திரிகையாளர் சந்திப்பில், தனுஷின் நகைச்சுவை உணர்வு அனைவரையும் அசத்தியது. இத்திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டபோது, தனுஷ் “நான் இந்த படத்தில் எப்படி நடித்தேன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை”. மேலும் அவர், “நம்ப முடியாத அதிசயமாக இருந்தது, மிக உற்சாகமாக உணர்ந்தேன். நிச்சயமாக, படம் குறித்து நான் அதிகம் சொல்ல முடியாது. இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி, என்னால் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது இம்மாதிரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன் என்றார்.