தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த இந்தப்படம் அந்த ஆண்டில் அதிகமான வசூலையும் வாரிக் குவித்தது.
150 கோடிக்கு மேல் செய்ததால் அதே இயக்குனர் அட்லீக்கு மெர்சல் படத்தை இயக்குகிற வாய்ப்பையும் தானே அவர் வீட்டுக்குத் தேடிப்போய் கொடுத்தார் விஜய்.
அந்தப்படமும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.
முன்னதாக தமிழில் ‘தெறி’ படம் ரிலீசான போதே தெலுங்கில் ‘போலீசுடு’ என்ற டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. சுமாராகத்தான் வசூலை பெற்றது.
டப்பிங்கின் நிலவரம் இப்படியிருந்தாலும் இந்தப் படத்தை ஆந்திர ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து இயக்கப் போகிறார் இயக்குனர் ஸ்ரீனு வைட்லா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் ரவி தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார்.
சமந்தாவுக்கு திருமணம் ஆகி விட்டதால் அவருக்குப் பதில் கேத்ரின் தெரசா நடிக்கிறார். தமிழில் இன்னொரு நாயகியாக நடித்த எமிஜாக்சனும் இந்த தெலுங்கு பதிப்பில் நடிக்க உள்ளார்.