அகலக்கால் வேணாம்… : ‘ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்’ அதிரடி முடிவு

த்து படங்களில் ஏதாவது ஒன்றிரெண்டு படங்கள் ஓடவில்லை என்றால் கூட பரவாயில்லை. பத்தில் ஒன்று தான் தேறுகிறது என்றால் பெரும் முதலீட்டைப் போட்ட தயாரிப்பாளர்களுக்கு மனசுக்குள் சின்னதாக பயம் வரத்தானே செய்யும்!

அப்படி ஒரு நிலையில் தான் தங்களது ‘பெரிய பட்ஜெட்’ முடிவை மாற்றியிருக்கிறது பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்.

சுசிகணேசன் இயக்கிய ‘திருட்டுப் பயலே’ படத்தின் மூலம் படத் தயாரிப்பில் இறங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் சினிமா.

அந்தப் படத்தை தவிர அடுத்தடுத்து பணத்தை கொட்டி பிரம்மாண்டமாக தயாரித்த பெரும்பாலான படங்கள் முதலுக்கே மோசம் என்று சொல்லும் படியாக அமைந்து விட்டன.

இதனால் படத் தயாரிப்பிலிருந்து கொஞ்ச காலம் விலகியிருக்க அந்த நிறுவனம் நினைத்திருந்த நேரத்தில் தான் மீண்டும் அந்த நிறுவனத்தின் ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்து போட்டு எண்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.

‘திருட்டுப் பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையைச் சொல்லி தயாரிப்பை தொடர வைத்திருக்கிறார். இது மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு ஆகும் செலவைப் போல இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட இருக்கிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து கே.வி ஆனந்த் இயக்கும் படம், சுசீந்திரன் இயக்கும் படம் ஆகியவற்றையும் தேவையான பட்ஜெட்டில் மட்டுமே எடுக்கப் போகிறதாம். அதோடு இனி பெரிய ஹீரோக்களை நம்பி அகலக்கால் வைக்காமல், புது ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை நல்ல கதையம்சமுள்ள மினிமம் பட்ஜெட் படங்களை தயாரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

பட்டாதான் புத்தியே வருது..!

AGS EntertainmentThiruttu Payale 2ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்திருட்டுப் பயலே 2
Comments (0)
Add Comment