சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை களவாடிய “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”!

‘டூ மூவிபஃஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் படம் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”. ‘

திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே, சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை கலை இயக்குனர் ரெமியன் அழகாக தன்னுடைய மனதில் களவாடி, சென்னை அருங்காட்சியகம் போலவே ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை நுங்கம்பாக்கத்தில் அமைத்து இருக்கிறார்.

எப்படிப்பட்ட வடிவமைப்பையும் கனகச்சிதமாக படப்பிடிப்பு களத்தில் உருவாக்கி தரும் கலை இயக்குனர் ரெமியன், ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர்.

கயல்’ சந்திரன் – சாட்னா டைட்டஸ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவாளர் ஜோ மார்ட்டின் (வில் அம்பு), இசையமைப்பாளர் அஷ்வத் (நளனும் நந்தினியும்), படத்தொகுப்பாளர் வெங்கட் (மிருதன்) மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் என பல திறமை படைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” படத்தில் பணிபுரிவதால் மேலும் பல சுவாரசியங்களை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Thittam Poattu Thirudura KootamThittam Poattu Thirudura Kootam Movie News
Comments (0)
Add Comment